Quantcast
Channel: Free Tamil Ebooks
Viewing all 762 articles
Browse latest View live

303 மின்னூல்கள் – 48 லட்சம் பதிவிறக்கங்களுடன் இன்று 4 ஆண்டுகளை நிறைவு செய்யும் FreeTamilEbooks.com திட்டம்

$
0
0

48 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவிறக்கங்கள், 303 மின்னூல்கள், பல்லாயிரம் வாசகர்கள், நூற்றுக்கணக்கான  எழுத்தாளர்கள், பல புது பங்களிப்பாளர்களுடன், இன்று FreeTamilEbooks.com திட்டம் 4 ஆண்டுகளை நிறைவு செய்து 5ஆவது ஆண்டில் நுழைகிறது.

அடுத்த ஆண்டுக்கான இலக்குகள், பல புது செயல்கள், எழுத்தாளர்கள், பங்களிப்பாளர்களுக்கு போட்டிகள், பரிசுகள் என பலவற்றை திட்டமிட்டு வருகிறோம். விரைவில் அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.

உங்கள் கருத்துகளை எமது உரையாடல் களத்தில் பகிருங்கள்.
https://groups.google.com/forum/#!forum/freetamilebooksforum

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் பல்லாயிரம் நன்றிகள்.


சண்டையே வரலியே –சிறுகதைகள் –நிர்மலா ராகவன்

$
0
0

சண்டையே வரலியே – சிறுகதைகள்

ஆசிரியர் – நிர்மலா ராகவன்
nirurag@gmail.com

மின்னூலாக்கம் – த . தனசேகர்
tkdhanasekar@gmail.com

அட்டைப்படம் – த . சீனிவாசன்
tshrinivasan@gmail.com

மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

முன்னுரை

திருமணம் என்றாலே பல்வேறு கனவுகள் எழும், இருபாலருக்கும். நம் கதாநாயகனுக்கு உப்பு சப்பு இல்லாதிருக்கும் மணவாழ்க்கை அலுத்துவிடுகிறது. அதற்காக என்ன முட்டாள்தனமெல்லாம் செய்கிறான் என்று பாருங்கள் முதல் கதையில்.

யாருக்காவது உபயோகப்படுமோ என்று, `சிறுகதைகள் புனைய சில உத்திகள்’ என்பதைக் கட்டுரையாக எழுதி, சிறுகதை ஆக்கியது.

தத்தெடுக்கப்பட்ட ஒருவனின் மனப்போராட்டம் `யார் பிள்ளை?’யில்.
நாய், பூனை என்றாலே வெறுத்து விரட்டுபவர்கள் `குற்ற உணர்ச்சியே கருணையாக’ கதையைப் படிக்க வேண்டாம்.
இணக்கமான உறவற்ற ஒரு தம்பதியரின் மனப்போராட்டம் `வாரிசு’ கதையில்.

வயதானவர்கள் இறந்தால், ஒரு பழுத்த இலை உதிர்வதுபோல் அந்த நிகழ்வை ஏற்கும் அவர்களின் ஆன்மா. ஆனால், காலன் கெடு வைத்த நாளுக்கு முன்னரே ஒருவருக்குத் துர்மரணம் சம்பவித்தால், தனது முடிவைச் சற்றும் எதிர்பாராத நிலையில், தனது நிலை புரியாது, அவரது ஆவி அந்த இடத்திலேயே சுற்றிக்கொண்டு இருக்குமாம். (`விட்ட குறை’).

பாலியல் வதைக்கு ஆளான சிறுமியின் மனப்போராட்டம், அவளைப் புரிந்துகொள்ள முயன்ற தாயின் வேதனை இரண்டையும் சித்தரிக்கிறது `பிளவு’.

சிரிப்பில் ஆரம்பித்த இத்தொகுப்பு அயல்நாட்டுத் தொழிலாளி ஒருவனின் வாழ்க்கைப் போராட்டத்தால் ஏற்படும் வேதனையில் முடிகிறது.

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “சண்டையே வரலியே epub” sandaye-varaliye.epub – Downloaded 91 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “சண்டையே வரலியே mobi” sandaye-varaliye.mobi – Downloaded 23 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “சண்டையே வரலியே A4 PDF” sandaye-varaliye.A4.pdf – Downloaded 119 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “சண்டையே வரலியே 6 inch PDF” sandaye-varaliye.6inch.pdf – Downloaded 34 times –

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/sandaye-varaliye

புத்தக எண் – 304

ஜூலை 28 2017

 

 

துப்பறியலாம். வாங்க! –ராம்குமார்

$
0
0

துப்பறியலாம் வாங்க!!! – அமெரிக்காவின் மிக சிக்கலான கொலை வழக்குகள்

ராம்குமார் – ramg75@gmail.com

மின்னூல் வெளியீடு : freetamilebooks.com

உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

மின்னூலாக்கம் & அட்டைபடம் – லெனின் குருசாமி – guruleninn@gmail.com

 

துப்பறியலாம் வாங்க – ஒரு அறிமுகம்.

மனிதனுக்கு சஸ்பென்ஸ் என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்ற சஸ்பென்ஸ் தான் ஜோதிடம் பக்கம் இழுத்துச் செல்கிறது.

2000-வது வருடம் டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மெடிக்கல் டிடக்டிவ்ஸ்” தொடர், மிகவும் பயனுள்ள, ஆர்வத்தை தூண்டக்கூடிய நிகழ்ச்சி.

 

ஆசிரியர் பற்றி

ராம்குமார், ஒரு கணிப்பொறி பட்டதாரி. வேலை செய்வது ஆய்வாளராக.

ramg75@gmail.com

pinnokki.blogspot.com

தொடர் பற்றி

அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு குற்றம் (கொலை, கொள்ளை, நோய்) பற்றி முதல் 10 நிமிடங்களுக்கு, ஒரு நாடக பாணியில் நடிகர்கள் நடிப்பதின் மூலம் காண்பிப்பார்கள். அடுத்த 10 நிமிடங்களுக்கு, அந்த குற்றத்தை போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் எப்படி துப்பறிந்து, குற்றவாளியைக் கண்டுபிடித்தார்கள் என்பதை பற்றி விவரிப்பார்கள். கடைசி 5 நிமிடங்கள், அந்த குற்றத்தினால் பாதிக்கப்பட்டவரின் உண்மையான தோற்றத்தை போட்டோவில் காண்பிப்பார்கள்.

இத்தொடர், மிகவும் பயங்கரமான, சிக்கலான குற்றங்களை நிகழ்த்தியவர்கள் எப்படிப்பட்ட தடயங்களை விட்டுச் சென்றார்கள்?, அதை மருத்துவ பூர்வமாக எப்படி கண்டுபிடித்து, கோர்ட்டில் நிரூபித்து, தண்டனை வாங்கிக் கொடுத்தார்கள் என்பதை மிகவும் அருமையாக விளக்கியது.

இந்த மாதிரி வழக்குகளை நிரூபிக்க அமெரிக்க சட்டங்கள் சில கடுமையான விதிமுறைகளை பின்பற்றி வருகிறது (இந்திய சட்டங்களும் இப்படித்தான் என நினைக்கிறேன்). அந்த சட்டங்கள் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்பதை முக்கியமாக கருதுகிறது. எடுத்துக்காட்டாக, போலீசார் பின்வருபவற்றை சந்தேகத்துகிடமில்லா வகையில் கோர்ட்டில் எடுத்துரைக்க வேண்டும்.
கொலை வழக்குகளில், கொலை செய்யப்பட்டவரின் உடல் மற்றும் கொலைக்கு உதவிய ஆயுதம்
கொலை நடந்த நேரம் மற்றும் அந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் அந்த இடத்தில் இருந்தார் அல்லது அவர்தான் அந்த கொலையை செய்ய சொன்னார் என்பதற்கான விஞ்ஞான பூர்வமான ஆதாரம்.

மேல் கூறியவற்றில் எதையாவது ஒன்றை நிரூபிக்க தவறினால், குற்றவாளி தப்பித்துவிடுவான். இந்த விஷயங்களை தெரிந்து, அதில் மாட்டிக் கொள்ளாமல் குற்றம் செய்தவர்கள் பலர், ஆனால், அனைவரும் மாட்டிக் கொண்டது வேறு கதை. சில குற்றங்கள் 20 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டனை அடைந்ததும் உண்டு. மரணமடைந்தவர்களை எரிக்காமல், புதைக்கும் பழக்கம் பெரும்பாலும் அங்கு பின்பற்ற படுவது போலீசாருக்கு, போஸ்ட்மார்டம் செய்து, குற்றத்தை நிரூபிக்க உதவியாக இருக்கிறது.

இத்தொடரில் ஒளிபரப்பான சில சிக்கலான வழக்குகளைப் பற்றி, எழுதலாம் என நினைக்கிறேன். 10 வருடங்களுக்கு முன்பு பார்த்ததால், எனக்கு பெயர்கள் மறந்துவிட்டது. அதனால் எனக்கு நியாபகம் இருக்கும் அனைத்து தகவல்களையும், வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்.

 

துப்பறியலாம். வாங்க!!!

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “துப்பறியலாம் வாங்க! epub” thuppariyalam_vaanga.epub – Downloaded 377 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “துப்பறியலாம் வாங்க! mobi” thuppariyalam_vaanga.mobi – Downloaded 136 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “துப்பறியலாம் வாங்க! A4 PDF” thuppariyalam_vaanga_a4.pdf – Downloaded 724 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “துப்பறியலாம் வாங்க! 6 inch PDF” thuppariyalam_vaanga_6in.pdf – Downloaded 227 times –

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/detective_201708

புத்தக எண் – 305

ஆகஸ்ட் 3 2017

 

 

தமிழ் –மின்னிதழ் – 4 –சி. சரவணகார்த்திகேயன்

$
0
0

தமிழ்  இலவச‌ மின்னிதழ்
| இதழ் : 4 | இளவேனில் – 2017 |

ஆசிரியர்
சி. சரவணகார்த்திகேயன்

அட்டை ஓவியம்
ராஜேஷ்வர் நியாலபள்ளி

அட்டை வடிவமைப்பு
மீனம்மா கயல்

 

ஆக்கம் – உதவி
சௌம்யா

ஆலோசனை
இரா. இராஜராஜன்
ந. பார்வதி யமுனா

தொடர்புக்கு
மின்னஞ்சல் – c.saravanakarthikeyan@gmail.com
வலைதளம் – http://tamizmagazine.blogspot.in/
அலைபேசி – +91 98803 71123

மின்நூலாக்கம்
சேலம் மணிகண்டன்
மின்னஞ்சல் – manikandansalem@outlook.com

மின்நூல் வெளியீடு
FreeTamilEbooks.com

உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

மீட்சியின் துயரம்

நீள்தூக்கத்திலிருந்து விழித்தது போல் கிட்டத்தட்ட ஈராண்டு இடைவெளிக்குப் பின் இதழ் வெளியாகிறது.

தமிழ் இதழை ஏன் தொடங்கினேன்? சிற்றிதழோ வெகுஜன இதழோ படைப்புகளை வெளியிட நிறையச் சிரமப்பட்டிருக்கிறேன். இப்போதும் அப்படியே. என் போலானவர்களுக்கான ஓர் ஆரம்பக் களமாக இது அமைய வேண்டும் என விரும்பினேன். நன்றாக‌ எழுதுபவன் ஏன் வாய்ப்புக்கு அலைய வேண்டும் என நினைத்தேன். கடந்த மூன்று இதழ்களில் அந்த எதிர்பார்ப்பு மிகச் சிறிய அளவிலேயே நிறைவேறியது. எழுத்து வன்மை கொண்டவர்களே இல்லையா அல்லது அவர்கள் என்னிடம் எழுத விரும்பவில்லையா தெரியவில்லை. இதழுக்குத் தானாய்ப் படைப்பு அனுப்பிய‌வர்கள் பெரும்பாலும் என் வட்டம் சேர்ந்தவர்கள். அல்லது நிராகரிக்கப்படும் தரத்திலான‌ எழுத்துக்கள். மற்றபடி, வெளியானவற்றில் கணிசம் தொங்கிப் பெற்றவை. அது இந்த இதழுக்கான நடைமுறைத் தேவை என்ன என்ற கேள்வியை எனக்குள் எழுப்பியது.

வாசகப் பரப்பு குறைவு, அதிலும் நல்ல வாசகர்கள் குறைவு எனும் போது எழுதுபவர்கள் வரத்து குறையும். இலவச இதழ் என்பதால் படைப்புகளுக்குச் சன்மானம் அளிப்பதில்லை. இதுவும் ஒரு விலக்கப் புள்ளி. ஆர்வமுடன் எழுதுபவர்களுக்கு இன்று இணையத்திலேயே ஏராளமான‌ பிரபல வாயில்கள் உண்டு. ஆக, புதியவர்களுக்கான தளம் இவ்விதழ் என்று எண்ணியது பிழை என்பதை உணர்ந்தேன். எழுத்தாளர்களின் நேர்காணல் ஒன்று தான் தமிழ் வெளியாவதற்கான ஒரே தேவையாக இருக்கிறது என நினைக்கிறேன். ஜெயமோகனிடம் இதைப் பற்றி எழுதிய போது “சோர்வுற வேண்டாம். எந்த எழுத்தாளருக்கும் எழுத்தின் தொடக்க காலத்தில் ஓர் இதழ் நடத்துவது ஒரு நல்ல அனுபவம். நல்ல கல்வி அது.” என்று சொன்னார்.

கடந்த ஆண்டு மாதொருபாகன் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்த‌ போது இரண்டாம் முறையாக பெருமாள்முருகன் அவர்களை நேர்காணலுக்கு அணுகினேன். அவரிடம் அப்போது சொன்னது ஒன்று தான் – “ஓராண்டாக இதழ் வெளியாகவில்லை. உங்கள் நேர்காணலைச் சாக்கிட்டுக் கொண்டு வருவேன்”. ஆனால் அவர் அப்போது பேட்டி தரும் மனநிலையில் இல்லை. பிறகு இந்த ஆண்டு எல்லாம் கைகூடி வர இதழ் மீண்டிருக்கிறது. இப்போது இதழ் வெளியாக அவரது நேர்காணல் மட்டுமே காரணம். அவருக்கு நன்றி. உயர்நீதிமன்றத் தீர்ப்பின் ஓராண்டுக் கொண்டாட்டமாகவும் இவ்விதழைப் பார்க்கலாம்.

தொடர்ந்து ஆதரவளித்து வரும் நண்பர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் என் அன்பு.

*
கடந்த மூன்றாண்டுகளாக நாக்கைக் குறி வைத்த ஃபாசிஸ ஆட்சி நம் தேசத்தில் நடந்து கொண்டிருக்கிறது. தனி மனிதன் என்ன மொழி பேச வேண்டும் என்றும், என்ன உணவு உண்ண வேண்டும் என்றும் சர்க்கார் தீர்மானிக்கிறது. இஸ்லாமியர்களும், தலித்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒடுக்கப்படுகின்றனர்.
ஒரு நூற்றாண்டாய்த் தயங்கி ஒலித்த இந்துத்துவக் குரல்கள் இன்று எக்காளமிடுகின்றன. உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூட தம் மதச்சார்பை, முட்டாள்தனத்தைப் பொதுவெளியில் வெளிப்படுத்தத் தயங்குவதில்லை. ஆதரிப்பவன் தேச பக்தன், எதிர்ப்பவன் தேசத் துரோகி என்ற‌ இருமத்துள் அடைக்க முனைகிறார்கள்.

சிதறியுள்ள‌ மதச் சார்பற்ற மற்றும் முற்போக்கு அரசியல் சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது.

– சி. சரவணகார்த்திகேயன்

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “தமிழ் - மின்னிதழ் - 4 - epub” TamizMagazine_Issue04.epub – Downloaded 180 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “தமிழ் - மின்னிதழ் - 4 - mobi” tamizh-emagazine-edition-4.mobi – Downloaded 71 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “தமிழ் - மின்னிதழ் - 4 - A4 PDF” TamizMagazine_Issue04.pdf – Downloaded 355 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “தமிழ் - மின்னிதழ் - 4 - 6 inch pdf” TamizMagazine_Issue04-6-inch.pdf – Downloaded 107 times –

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/thamizh-emagazine-edition-4

புத்தக எண் – 306

ஆகஸ்ட் 4 2017

 

 

தமிழ் மின்னூலகங்களும் தமிழ் மின்னூல்களும்

$
0
0

முன்னுரை:

தமிழில் நூல்கள் பல படிக்க விரும்புவோரின் ஆர்வத்தை நிறைவு செய்யும் நோக்கிலும், நூல்களை வரலாற்றுப் பதிவுகளாக ஆவணப்படுத்தும் நோக்கிலும் இணையவழி முயற்சியாக மின்னூல்களை (eBooks) உருவாக்கும் செயல்பாடு கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வருகின்றது. உலகில் எந்த மூலையில் இருந்தும் இணையம் வழியாகத் தமிழ்நூல்களை தங்கள் கணினி வழி படிக்கும் வாய்ப்பு பல தொழில் நுட்பங்களைக் கடந்து இக்காலத்தில் நன்கு மெருகேறிய நிலையில் உள்ளது எனலாம். நூல்களை html இணையப் பங்கங்களாக பலவகை ‘எழுத்துரு’க்களில் (fonts) உருவாக்கி அளித்த நிலையில் இருந்து முன்னேறி, ‘ஒருங்குறி’ (Unicode) எழுத்துருக்களைப் பயன்படுத்தும் முறைக்கு முன்னேறியது படிப்பவருக்கு உதவும் நல்லதோர் மாற்றம்.

மின்னூல்களின் வளர்ச்சி:

இப்பொழுது கணினி வழி படிப்பதையும் கடந்து கைபேசி, ஆமசான் ‘கிண்டில்’ அல்லது பிற ‘ஆன்ட்ராய்டு’ மின்பலகை (டேப்லட்) போன்றவை வழியாகவும் மின்னூல்களை பதிவிறக்கிப் படிக்கும் நிலை மிகப்பரவலாக வழக்கத்திற்கு வந்துவிட்டது. இது போன்ற புதுமுறை படிக்கும் கருவிகளுக்கான மென்பொருள்களும், அதற்கேற்ற வகையில் மின்னூல் வெளியீடுகளும் வந்துள்ளன.  கிண்டில் வழி படிப்போர் ‘மோபி’ (mobi) மின்னூல் வடிவிலும், பிறர் ‘இபப்’ (EPub) வகையிலான மின்னூல்களைப் படிக்கும் முறையும் உள்ளது. கணினி, கைபேசி, மின்பலகை போன்ற எந்தப் படிக்கும் கருவி கொண்டும் ‘உருப்பட வடிவம்’ (PDF) வகை மின்னூல்கள் படிக்கும் முறை உள்ளது. மேலுமொரு 15 வகையில் (Format) மின்னூல்கள் உருவாக்கப்படுகின்றன என்றாலும் (பார்க்க: https://en.wikipedia.org/wiki/Comparison_of_e-book_formats), PDF, EPub, mobi வகை மின்னூல்கள் வெளியீடே முதல்  மூன்று இடங்களில் உள்ளன. அதனால் வணிக நோக்கு அல்லது சேவை நோக்கு என இருவகை மின்னூல் உருவாக்கும் பிரிவினரும் இந்த மூன்று வகையிலேயே பெரும்பாலும் நூல்களை உருவாக்கி வருகின்றனர். தமிழ் மின்னூல்களை உருவாக்கி வழங்கி வருவதில் தன்னார்வலர்களும் தமிழக அரசும் பெருமளவில் பங்களித்துள்ளார்கள்.

மின்னூல் வெளியீட்டாளர்கள்:

இதில் தமிழக அரசின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கும் திட்டத்தைக் கொண்டு வந்ததையும், அவர்களின் பலநூறு நூல்களை ‘தமிழ் இணையக் கல்விக்கழகம்’ (http://www.tamilvu.org/library/libindex.htm) வழியாக 2001 ஆண்டு முதல் படிக்க ஏற்பாடு செய்துள்ளதையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நூலகம் பகுதியில் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள் பல ‘உருப்பட வடிவம்’ (PDF), ‘தட்டச்சு வடிவம்’ (text) போன்ற வகைகளில் படிக்கக் கிடைப்பது தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும் பெருமளவு உதவியாக அமைந்துள்ளது.

அதற்கடுத்து வணிக நோக்கின்றி, பல தன்னார்வலர்களும் களமிறங்கி அரும்பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் முன்னோடி ‘மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்’ (http://www.projectmadurai.org/pmworks.html) ஆகும்.  மதுரை திட்டத்தின் தன்னார்வக் குழுவினர் 1998 ஆண்டு  முதல் இப்பணியில் ஈடுபட்டு 500 க்கும் மேற்பட்ட மின்னூல்களை  ஒருங்குறி எழுத்துருவிலான வலைத்தளம், உருப்படம், மின்பலகையில் படிக்க ஆறு அங்குல அளவிலான உருப்படம் (html site in Unicode, PDF, Kindle (6-inch PDF) வகையில் மின்னூல்களை வழங்குகிறார்கள்.

ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட உருப்பட வடிவம் நூல்களை 2005 ஆம் ஆண்டில் இருந்து ‘நூலகம்’ (http://www.noolaham.org) அமைப்பு வெளியிட்டு வருகிறது. அவ்வாறே, தமிழ் மரபு அறக்கட்டளை நூலகம் (http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html),  தமிழம்.வலை (http://www.thamizham.net/) ஆகியன மின்னூல் வெளியீட்டில் முன்னணியில் உள்ளன. உலகின் பல நூலகங்களில் இருந்தும் தமிழ்நூல்களை மின்னூலாக்கி வழங்குவதில் கூகுளின் பணியும் சிறப்பானது  (https://books.google.com/).  இவர்கள் யாவரும் காப்புரிமை காலம் முடிந்துவிட்ட நூல்களையும், காப்புரிமை விலக்கு  அளிக்கப்பட நூல்களையும் மின்னூல் வடிவத்தில் அளிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். காப்புரிமை உள்ள மின்னூல்களை வணிக நோக்கில் விற்பனை செய்யும் பல பதிப்பகத்தாரும் இப்பொழுது உருவாகியுள்ளனர்.

ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம்:

இவர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வழிமுறையில்,  ‘ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம்’ (http://freetamilebooks.com/) தன்னார்வக் குழுவினர், எழுத்தாளர்களை அணுகி அவர்களது நூல்களைக் காப்புரிமையை நீக்கி அளிக்கும்படி ஊக்குவித்துக் கடந்த நான்கு ஆண்டுகளாக 300 க்கும் மேற்பட்ட மின்னூல்களை உருவாக்கி வெளியிட்டுள்ளார்கள். இவர்களால் வாரம் ஒரு மின்னூல் வெளியீடு என்ற கணக்கில் தற்பொழுது மின்னூல்கள்  வெளியிடப்படுகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் நூல்களின் காப்புரிமையை நீக்கி அளித்துள்ளார்கள். இவ்வாறு இவர்கள் உருவாக்கிய நூல்கள் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட முறை  பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம், ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க – “epub” வகை நூல்களும்; புது கிண்டில் கருவிகளில் படிக்க – “mobi” வகை நூல்களும்; குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணினிகளில் படிக்க – “A4  அளவு PDF” வகை நூல்களும்; பழைய கிண்டில், நூக் கருவிகளில் படிக்க – “6 அங்குல அளவு  PDF” வகை நூல்களும்  வெளியிட்டு வருகிறார்கள்.

தமிழ் மின்னூல் படிப்பவர்கள், எந்தவகை மின்னூல்களை அதிகம் பதிவிறக்கம் செய்து படிக்கிறார்கள்? இதில் தொழில்நுட்பம் வளர வளரக் காலப்போக்கில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்விகளுக்கு  இவர்கள் வலைத்தளத்தில் (http://freetamilebooks.com/htmlbooks/download-report.html) உள்ள தரவுகள் பட்டியலை ஆராய்வது பதிலளிக்கும்.

ஆய்வின் அணுகுமுறை:

ஜூலை2017  முடிவில் மின்னூல் பதிவிறக்கங்கள் குறித்த தரவுகள் ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டு ஆராயப்பட்டது.

ஒவ்வொரு மின்னூலிலும் எத்தனை விழுக்காடு, எந்த வகை மின்னூலாகப் பதிவிறக்கம் செய்யப்பட்டது என்று கணக்கிடப்பட்டது.

இந்த விழுக்காடுகளின் ‘இடைநிலை’ மற்றும் ‘சராசரி’ (Median and Average) ஆகியனவும் கணக்கிடப்பட்டது.

முதல் இரு ஆண்டுகளில் வெளியிடப்பட்ட நூல்கள் பிற்காலத்தில் பதிவிறக்கங்கள் செய்ய நேரும்பொழுது தற்கால தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மின்பலகை வழி படிக்கும் Epub, mobi, 6 – PDF நோக்கில் அதிக அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கக்கூடும் என்ற காரணத்தால், பொதுவாக மின்னூல் பதிவிறக்கங்கள் எந்த நிலையை நோக்கி நகர்கிறது எனத் தெளிவாக பிரித்தறியும் பொருட்டு,  கடந்த இரு ஆண்டுகளில்  வெளியிடப்பட்ட நூறு நூல்களிலும்  (நூல் வெளியீடு: 201 முதல் 300 வரை)  தனியாக விழுக்காடுகளின் ‘இடைநிலை’ மற்றும் ‘சராசரி’ ஆகியன கணக்கிடப்பட்டது.

பதிவிறக்கம் செய்யப்பட்டதில் “epub” மற்றும் “A4  அளவு PDF” வகை மின்னூல்கள் தமிழ் மின்னூல்கள் படிப்பவரால் அதிக அளவில்  பதிவிறக்கம் செய்யப்படுவது தெரிவதால் அவற்றின் பதிவிறக்கங்கள் பிற மின்னூல் வகை வெளியீடுகளுடன் ஒப்பிட்டு நோக்கப்பட்டது.

இந்த ஆய்வின் வழி கீழ்க்காணும் முடிவுகள் தெரிய வருகின்றன:

Siragu tamil ebook1

Siragu tamil ebook2

Siragu tamil ebook3

1. Epub வகை மின்னூல்களின் பதிவிறக்கங்கள் அதிகரித்து வருகிறது. விரைவில் இரண்டில் ஒரு மின்னூல்  பதிவிறக்கம் Epub வகை மின்னூல் என மாறக்கூடும்

2. A4 – PDF மின்னூல்களின் பதிவிறக்கங்கள் குறையத் தொடங்குவது தமிழ் வாசகர்களிடம் மின்பலகை, கைபேசி வழி படிக்கும் வழக்கம் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. சற்றொப்ப  மூன்றில் ஒருவர் மட்டுமே A4 – PDF நூல்களைப் பதிவிறக்கம் செய்கிறார்கள்.

3. mobi வகை மின்னூல்களின் பதிவிறக்கங்களில் பெரிய மாறுதல் எதுவும் இல்லை, தொடர்ந்து 6% தமிழ் மின்னூல் படிப்பவர்கள்  mobi வகை மின்னூல்களைப் படிப்பவர்கள் என்ற அளவில் எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளனர். பழைய கிண்டில் வழி படிப்பவர்களையும் கணக்கில் கொண்டால், பதிவிறக்கங்களில் ஐந்தில் ஒருவர் (20%) மட்டுமே mobi & 6–pdfமின்னூல் வகையைப் படிப்பவர்கள்.

4. ஐந்து பேரில் நால்வர் (80%) Epub & A4 – PDF வகை மின்னூல்களைப் பதிவிறக்கம் செய்தாலும், Epub வகை மின்னூல் பதிவிறக்கங்கள் அதிகரித்து வருகிறது.

Siragu tamil ebook4

தமிழ்மின்னூல் படிப்போரின் தேவைகளை அடிப்படியாகக் கொண்டு மின்னூல்கள் வெளியிட விரும்புவோருக்கு ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் பல்வேறு  மின்னூல் வகை பதிவிறக்கங்கள் குறித்து அளிக்கும் தரவுகளில் கண்ட இந்த முடிவுகள் உதவக்கூடும்.

Siragu tamil ebook5

நன்றி:

ஆய்வுக்கு உதவும் வகையில் தங்கள் தளத்தில் தரவுகளை வெளியிட்டுள்ள ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினருக்கு நன்றி.

 

தேமொழி

 

மூலம் – http://siragu.com/தமிழ்-மின்னூலகங்களும்-தம/

சாப்பிட வாங்க –வெங்கட் நாகராஜ்

$
0
0

சாப்பிட வாங்க

வெங்கட் நாகராஜ்
venkatnagaraj@gmail.com

 

மின்னூல் வெளியீடு
www.freetamilebooks.com

 

மின்னூலாக்கம் மற்றும் அட்டைப்படம்:

வெங்கட் நாகராஜ்
venkatnagaraj@gmail.com

 

உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0
கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

 

விதம் விதமாய் சாப்பிட வாங்க…….

பயணம் செய்வது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். அதைப் போலவே சாப்பிடுவதும் என்று சொன்னால் என்னை நன்கு தெரிந்தவர்கள் திட்டுவார்கள் – பசிக்கு சாப்பிட வேண்டுமே தவிர, ருசிக்கு சாப்பிடக் கூடாது என்று அவ்வப்போது என் மனைவியிடமும் அம்மாவிடமும் சொல்வது வழக்கம். இருந்தாலும் நானே சமைத்து சாப்பிட வேண்டிய நேரங்களில் விதம் விதமாய் சமைப்பதுண்டு! போலவே பயணம் செய்யும் சமயங்களில் எந்தெந்த ஊரில் என்ன கிடைக்கிறதோ அதைச் சாப்பிடுவதே எனது வழக்கம். வட இந்தியாவில் இருந்து கொண்டு, அதுவும் வடக்கின் எல்லை மாநிலங்களில், தமிழகத்திலிருந்து வெகு தொலைவு வந்த பிறகு சாதத்துடன் சாம்பார், ரசம், பொரியல், கூட்டு என சாப்பிடக் கிடைக்குமா என்று தேடினால் பயணம் முழுவதும் பட்டினி தான் இருக்க வேண்டும். மசாலா தோசை என்ற பெயரில் புளித்த மாவில் செய்த தோசை மீது உருளைக்கிழங்கு மசாலா வைத்து மகா மோசமான சுவையில் கொடுப்பார்கள் – அதைச் சாப்பிடுவதற்குச் சும்மா இருந்து விடலாம்.

இப்படி சில அனுபவங்கள் கிடைத்த பிறகு, எங்கே சென்றாலும், அந்த ஊரின் உணவு என்னவோ அதையே கேட்டு வாங்கிச் சுவைப்பது எனது வழக்கம். வடக்கே பெரும்பாலான ஊர்களில் காலை உணவு பராட்டா தான் – பயப்பட வேண்டாம் – இது மைதா பராட்டா அல்ல – கோதுமை பராட்டா, கூடவே தொட்டுக்கொள்ள ஊறுகாயும் தயிரும்! ஆனாலும், ஒவ்வொரு ஊருக்குச் செல்லும் போதும், வித்தியாசமான உணவு வகைகள், அவை தயாரிக்கப்படும் முறைகள் என கேட்டு சாப்பிடுவது வழக்கமாகி இருக்கிறது. சில இடங்களில் உணவுக்காக படும் அவஸ்தைகள், தேடல்கள் என நிறையவே அனுபவங்கள். பயணக் கட்டுரைகள் எழுதும் போது அந்தந்த ஊரில் உணவு உண்ட அனுபவங்களையும் எழுதுவது வழக்கம். அது பலருக்கும் பிடித்தமானதும் கூட! அப்படி எழுதியது தவிற, சமையலுக்காகவே சில தனி பதிவுகளும் எனது வலைப்பூவில் எழுதியதுண்டு.

பல ஊர்களில் கிடைத்த அனுபவங்கள் வித்தியாசமானவை. உதாரணத்திற்கு மில்க் மெய்ட் தேநீர் – வட கிழக்கு மாநிலங்களில் பயணித்த போது மலைப் பிரதேசங்களில் பால் தட்டுப்பாடு – பெரும்பாலும் லால் சாய் எனப்படும் கட்டஞ்சாய் தான். பால் விட்டு தேநீர் கேட்டால், கட்டஞ்சாயில் ஒரு ஸ்பூன் மில்க் மெய்ட் விட்டு கலக்கி தந்து விடுகிறார்கள். வாயில் வைக்கமுடியாத சுவை – ஒரு முறை அதைக் குடித்த பிறகு எங்கே சென்றாலும் பால் விட்ட தேநீர் கேட்கவில்லை!

உத்திரப் பிரதேசத்தில் பயணிக்கும் போது, குறிப்பாக அலஹாபாத், வாரணாசி ஆகிய இடங்களுக்குப் பயணிக்கும் போது காலை வேளையில் பால் [அ] தயிரில் தோய்த்த ஜாங்கிரிகள் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். எப்படித்தான் இருக்கிறது என சுவைத்தும் பார்த்திருக்கிறேன். பாலில் ஜாங்கிரியா? படிக்கும்போதே குமட்டுகிறதே என்று சிலர் நினைக்கலாம்….. ஆனால் இதற்கு உத்திரப்பிரதேசத்தில் பலத்த வரவேற்பும், ரசிகர்களும் உண்டு! வித்தியாசமான சில உணவு வகைகள், உணவு சம்பந்தமான அனுபவங்கள் ஆகியவற்றை தொகுத்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அவ்வப்போது வருவதுண்டு. பயணக் கட்டுரைகள் சிலவற்றை மின்புத்தகமாக வெளியிட்ட எனக்கு, சாப்பாடு அனுபவங்களையும் மின்புத்தகமாக வெளியிடலாமே என்ற எண்ணம் வரவே, அதன் தொடர்ச்சியாய், இதோ எனது ஐந்தாவது மின் புத்தகம் – ”சாப்பிட வாங்க!”

புத்தகம் பற்றிய எண்ணம் வந்ததும், எனது “சந்தித்ததும் சிந்தித்ததும்” வலைப்பூவில் எழுதிய சமையல்/சாப்பாடு அனுபவங்களையும் இங்கே தொகுத்து இருக்கிறேன். தொகுத்து வைத்த கட்டுரைகளை பிரபல பதிவர், எழுத்தாளர் திருமதி தேனம்மை லக்ஷ்மணன் அவர்களுக்கு அனுப்பி வைக்க, அவர் தொகுப்பு பற்றிய தனது எண்ணங்களை எழுதி அனுப்பி இருக்கிறார். திருமதி தேனம்மை லக்ஷ்மணன் அவர்களின் எண்ணங்கள் வரும் பக்கங்களில் கருத்துரையாக! இந்தத் தொகுப்பில் இருக்கும் அனுபவங்கள்/உணவுகள் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன். நீங்களும் படித்து, உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் மின்புத்தகத்தினை அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன்…….

வெங்கட் நாகராஜ்
புது தில்லி.

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “சாப்பிட வாங்க epub” Saapida%20Vaanga.epub – Downloaded 212 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “சாப்பிட வாங்க mobi” Saapida%20Vaanga.mobi – Downloaded 77 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “சாப்பிட வாங்க A4 PDF” Saapida%20Vaanga.pdf – Downloaded 1026 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “சாப்பிட வாங்க 6 inch PDF” Saapida%20Vaanga-6%20inch.pdf – Downloaded 133 times –

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/SaapidaVaanga

புத்தக எண் – 307

ஆகஸ்ட் 9 2017

 

 

நீங்களும் ஜெயிக்கலாம் –ரமணன்

$
0
0

நீங்களும் ஜெயிக்கலாம்
ரமணன்
ramananvsv@gmail.com

மின்னூலாக்கம் : த.சீனிவாசன் tshrinivasan@gmail.com

அட்டைப்படம் : மனோஜ்குமார், socrates1857@gmail.com

மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

அன்புள்ள வாசக நண்பரே,
சிறிய அளவில் ஒரு தொழிலையோ, வியாபாரத்தையோ துவக்கி வெற்றிபெற வேண்டும் என்பது உங்கள் கனவா?
ஆனால் கூடவே என்னால் இது முடியுமா? என்ற கேள்வியும் எழுகிறதா?
வெற்றி பெற்றவர்களுக்கு தெரிந்த அந்தச் சூத்திரத்தை யாராவது நமக்குச் சொல்லுவார்களா?
அப்படியே அதைத் தெரிந்துகொண்டாலும் அது எனக்கு பயன் தருமா?
போன்ற தொடர் கேள்விகளால் தயங்கி நிற்கிறீர்களா?

உங்கள் தயக்கங்களை தகர்த்தெறியும் இந்தப் புத்தகம் ஒரு தொழிலை துவக்க விரும்புவர்களுக்கு இருக்கவேண்டிய அடிப்படைத் தகுதிகள், அதை வளர்த்தெடுக்க வேண்டிய தகுதிகள், அதை வளர்த்தெடுக்க வேண்டிய முறைகள் போன்றவற்றோடு ஒரு தொழிலை துவக்கி அதை வளர்க்க இருக்கும் வாய்ப்புகள், அதனைப் பயன் படுத்திக்கொள்ளும் வழிகள், முயன்று வெற்றி பெற்றவர்கள், அப்படி முடியாமற் போனவர்கள் கையாண்ட வழிமுறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து நீங்களும் ஜெயிக்க வழிகளைச் சொல்லுகிறது.

சுருக்கமாகச் சொன்னால் இந்தப் புத்தகம் வெற்றியின் கையேடு. பக்கங்களைப் புரட்டப் புரட்ட உங்கள் அரண்மனையின் வாசல்கள் திறப்பதை நீங்கள் உணரமுடியும் !

ரமணன்
ramananvsv@gmail.com

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “நீங்களும் ஜெயிக்கலாம் epub” neengalum-jeyikkalam.epub – Downloaded 406 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “நீங்களும் ஜெயிக்கலாம் mobi” neengalum-jeyikkalam.mobi – Downloaded 109 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “நீங்களும் ஜெயிக்கலாம் A4 PDF” neengalum-jeyikkalam.pdf – Downloaded 628 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “நீங்களும் ஜெயிக்கலாம் 6 inch PDF” neengalum-jeyikkalam-6-inch.pdf – Downloaded 192 times –

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/neengalum-jeyikkalam

புத்தக எண் – 308

ஆகஸ்ட் 10 2017

 

 

ஏ.ஆர்.ரஹ்மான் –ஒலிப்புத்தகம்

$
0
0

ஏ.ஆர்.ரஹ்மான் – FreeTamilEbooks.com வழங்கும் ஒலிப்புத்தகம்.

ஆசிரியர் என் சொக்கன், முன்னேர் பதிப்பகம் – nchokkan@gmail.com

குரல் – கமலினி புருஷோத்தமன் lathika102@gmail.com

ஒலி ஒருங்கிணைப்பு – பிரியா priyacst@gmail.com

மூல நூல் – ஏ.ஆர்.ரஹ்மான் – http://freetamilebooks.com/ebooks/arrahman

அட்டைப்படம் : மனோஜ்குமார், socrates1857@gmail.com

ஒலிப்புத்தகம் வெளியீடு : http://FreeTamilEbooks.com

ஒலிக்கும் நேரம் – 03:34:44

 

உரிமை  – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். ஆனால், விற்பதற்கும் உள்ளடக்கத்தை மாற்றுவதற்கும் உரிமை கிடையாது. பகிரும் போது படைப்பாளியின் பெயரைக் குறிப்பிட்டே பகிர வேண்டும்.

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

ஒலி ஒருங்கிணைப்பு :
பிரியா, காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். ஐஐடி மும்பையில் Technical content writer ஆக பணிபுரிகிறார்.

குரல்:
கமலினி புருஷோத்தமன்,
வேலுரைச் சேர்ந்தவர்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் (மஸ்கட்).

 

பதிவிறக்க*

MP3 வடிவில்  பதிவிறக்க – அளவு 201.2 MB

Download “ஏ.ஆர்.ரஹ்மான் - ஒலிப்புத்தகம் - MP3” AR-Rahman-Tamil-AudioBook-NChokkan-Kamalini.mp3 – Downloaded 1953 times –

6 Inch PDF வடிவில் படிக்க

Download “ஏ.ஆர்.ரஹ்மான் 6 Inch PDF” AR-Rahman_NChokkan_Munner-Publications-6-Inch.pdf – Downloaded 50041 times – 796 KB

பிற வடிவங்களில் கேட்க – https://archive.org/details/ARRahmanTamilAudioBookNChokkanKamalini

 

புத்தக எண் – 309

ஆகஸ்ட் 13 2017

 

 

 


உயிருடன்…கவிதைகள் –இரா.சுப்ரமணி

$
0
0

உயிருடன்…

ஆசிரியர் : இரா.சுப்ரமணி

அட்டைப்படம் : சார்லஸ் ஏ.பி

https://www.behance.net/BlackoutBrother

மின்னூல் வெளியீடு : http://freetamilebooks.com/

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 முன்னுரை
வலைப்பதிவுகளில் வெவ்வேறு காலகட்டத்தில் நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பே ‘உயிருடன்…’. ஒரு வட்டத்துக்குள் நில்லாமல், காதல், நட்பு, நம்பிக்கை, மூடநம்பிக்கை, வானம், மேகம், நிலவு, இரவு, மழை … எனப் பல்வேறு பாடுபொருட்களை வகை தொகையில்லாமல் தன்னுள் அடைத்து வைத்திருக்கிறது இத்தொகுப்பு. எழுத்து வாகனத்திற்கு வாசிப்பு எரிபொருள் அவசியம் என்று பற்ற வைக்க, வாசிப்பு என்னை பற்றிக் கொண்டது. எழுத்து, வாசிப்பைத் தொடர்ந்த எழுத்து முயற்சி, புதிய முயற்சிகளுக்காக வாசிப்பு என நீண்ட பயணத்தில், நான் நடை பழகியதன் தொகுப்பு இம்மின்னூல். நன்றி!

அன்புடன்,
இரா.சுப்ரமணி <subramani95@gmail.com>
https://rsubramani.wordpress.com/
14 08 2017

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “உயிருடன்... கவிதைகள் epub” uyirudan.epub – Downloaded 72 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “உயிருடன்... கவிதைகள் mobi” uyirudan.mobi – Downloaded 19 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “உயிருடன்... கவிதைகள் A4 PDF” uyirudan.pdf – Downloaded 140 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “உயிருடன்... கவிதைகள் 6 inch PDF” uyirudan-poems-6-inch.pdf – Downloaded 46 times –

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/uyirudan

புத்தக எண் – 310

ஆகஸ்ட் 25 2017

விண்வெளியைத் தெரிந்து கொள்வோம் –இரா.பாலா

$
0
0

விண்வெளியைத் தெரிந்து கொள்வோம்

இரா. பாலா

மின்னூல் வெளியீடு : http://freetamilebooks.com/

உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0

கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

ஆசிரியர் : இரா.பாலா

 

மின்னூலாக்கம் & அட்டைபடம் – லெனின் குருசாமி – guruleninn@gmail.com

ஆம்ஸ்ட்ராங் போல விண்வெளி வீரராக வேண்டும் என்பது என் சிறுவயதுக் கனவு. அதற்கான வழிமுறை தெரியாததால் அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளவில்லை. பதினைந்து வயதில், செல்லரித்த கலைக்களஞ்சியத்தில் வானியல் பற்றி ஓரிரு வரிகள் படித்ததே தூண்டுதலாயிருந்தது. 2000 ஆண்டிற்குப் பின்னான இணையப் பரிச்சயம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை அதிகமாக்கியது. காசே வாங்காமல் கூகிள் கொடுத்த ‘’பிளாக்கர்’’ வாய்ப்பு தெரிந்ததை எழுதச் செய்தது. வாசித்தவர்களின் எண்ணிக்கை 10யை விட அதிகமானதால் தொடராய் எழுதக் காரணமாயிற்று. ஆக, ஓர் அசட்டுத் துணிச்சலில்தான் எல்லாம் நடந்தது. நண்பர் சீனிவாசன் இலவசமாய் இதை மின்னூலாய் வெளியிடுகிறேன் எனச் சொன்னதால் இன்று நீங்கள் வாசிக்கிறீர்கள். எல்லாவற்றிற்கும் காரணம் காசின்றிக் கிடத்த வாய்ப்புகளே.

எச்சரிக்கை: இன்னும் இது போல பல மின்னூல்கள் Creative Commons மூலம் வெளியிடும் திட்டமும் கைவசம் உண்டு.

இரா. பாலா,
நாகர்கோவில்
2017

மின்னஞ்சல் : balurbala@gmail.com

வலைப்பூ : http://rbaala.blogspot.in/

 

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “விண்வெளியைத் தெரிந்து கொள்வோம் epub” astronomy.epub – Downloaded 21 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “விண்வெளியைத் தெரிந்து கொள்வோம் mobi” astronomy.mobi – Downloaded 8 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “விண்வெளியைத் தெரிந்து கொள்வோம் A4 PDF” astronomy_a4.pdf – Downloaded 70 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “விண்வெளியைத் தெரிந்து கொள்வோம் 6 inch PDF” astronomy_6in.pdf – Downloaded 24 times –

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/astronomy_201708

புத்தக எண் – 311

ஆகஸ்ட் 28 2017

கொடி அசைந்ததும் காற்று வந்ததா? –கட்டுரைகள் –புதுகைத் தென்றல்

$
0
0

கொடி அசைந்ததும் காற்று வந்ததா?

புதுகைத் தென்றல்
kalasri109@gmail.com

 

மின்னூல் வெளியீடு : www.freetamilebooks.com

 

மின்னூலாக்கம் மற்றும் அட்டைப்படம்:

வெங்கட் நாகராஜ்
venkatnagaraj@gmail.com

 

உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0
கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

 

கொடி அசைந்ததும் காற்று வந்ததா???!!!!

கொடி அசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடி அசைந்ததா? அருமையான பாட்டுல்ல. மனதுக்கு ரொம்ப இனிமையானதும் கூட. இதே மாதிரிதாங்க நம்ம உடல் நலமும். உடல் நலத்தால் மன நலமா? மன நலத்தால் உடல் நலமான்னு சொல்லிட முடியாது. ஆனா ஒண்ணுக்கொண்ணு தொடர்புடையது.

இந்த தொடர் பாடம் எடுக்கும் முயற்சி எல்லாம் இல்லை. நான் இழந்து கற்றுக்கொண்ட பாடத்தை மற்றவர்கள் இழக்காமல் கற்றுக்கொள்ளும் ஒரு முயற்சி தான். கருத்துக்கள் வேறு படலாம். ஆனா மூலக்காரணம் ஒண்ணு நம் உடல்மன நலம் பேறுதல்.

பிரபல பாலிவுட் நடிகை தீபீகா படுகோன் அவங்க ஸ்ட்ரெஸ் பத்தி பேசியிருந்தாங்க. அதுக்கு அவங்க மருத்துவம் பார்த்துக்கிட்டதையும் பத்தி சொன்னதும் மக்கள் மனசுல என்ன இப்படி பேசறாங்களேன்னு இருந்தது.  ஆனா பலருக்கு தன் உடலின் நிலைக்கு காரணம் என்னன்னே தெரியாமலேயே இருக்காங்க. வலிக்கான மூலக் காரணம் என்னன்னு தெரியுமா?
நம் உணர்ச்சிகள் எவ்வளவு தூரம் நம் உடலை தாக்குது? நாம வலி நிவாரணி பூசறது, உள்ளுக்கு சாப்பிடறதுன்னு செஞ்சும் வலி ஏன் குறையலை? இதை எப்பவாவது யோசிச்சிருப்போமா?  இதற்கும் உடற்பயிற்சிக்கும் என்ன சம்பந்தம்? நாமே நம்மை குணமாக்கிக்க முடியுமா? மருந்து எடுத்துக்க நாம மருத்துவர் இல்லை. ஆனா மாற்றுவழிகள் இருக்கு. அது என்ன? பார்க்கலாம் வாங்க.

புதுகைத் தென்றல்
சென்னை.
27-08-2017

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “கொடி அசைந்ததும் காற்று வந்ததா? epub” Kodi%20Asaindhathum%20Kaatru%20Vandha%20-%20Pudhugai%20Thendral.epub – Downloaded 91 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “கொடி அசைந்ததும் காற்று வந்ததா? mobi” Kodi%20Asaindhathum%20Kaatru%20Vandha%20-%20Pudhugai%20Thendral.mobi – Downloaded 27 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “கொடி அசைந்ததும் காற்று வந்ததா? A4 PDF” Kodi%20Asaindhathum%20Kaatru%20Vandhathaa.pdf – Downloaded 151 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “கொடி அசைந்ததும் காற்று வந்ததா? 6 inch PDF” Kodi%20Asaindhathum%20Kaatru%20Vandhathaa-6%20inch.pdf – Downloaded 52 times –

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/KodiAsaindhathumKaatruVandhathaa_201708

புத்தக எண் – 312

ஆகஸ்ட் 28 2017

இனி இல்லை தோல்வி! –கட்டுரைகள் –நிர்மலா ராகவன்

$
0
0

இனி இல்லை தோல்வி

(கட்டுரைகள்)

நிர்மலா ராகவன்

மின்னூல் வெளியீடு : freetamilebooks.com

உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

மின்னூலாக்கம் & அட்டைபடம் – லெனின் குருசாமி – guruleninn@gmail.com

 

 

முன்னுரை

சமூக இயலும், உளவியலும் கலந்த கட்டுரைகள் இவை. குறுங்கதை மாந்தர்கள் பல இனங்களையும் நாட்டையும் சேர்ந்தவர்கள். இக்கட்டுரைகளை வல்லமை.காமில் தொடராக வெளியிட்ட திருமதி பவளசங்கரிக்கு என் மனமார்ந்த நன்றி.

நன்றி.

நிர்மலா ராகவன், மலேசியா

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “இனி இல்லை தோல்வி! epub” ini_illai_tholvi.epub – Downloaded 34 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “இனி இல்லை தோல்வி! mobi” ini_illai_tholvi.mobi – Downloaded 9 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “இனி இல்லை தோல்வி! A4 PDF” ini_illai_tholvi_a4.pdf – Downloaded 55 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “இனி இல்லை தோல்வி! 6 inch PDF” ini_illai_tholvi_6in.pdf – Downloaded 23 times –

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/ini_illai_tholvi

புத்தக எண் – 313

ஆகஸ்ட் 29 2017

போராளிகளின் சிந்தனைகள் –ஆர்.பட்டாபிராமன்

$
0
0

போராளிகளின் சிந்தனைகள்

ஆர்.பட்டாபிராமன்

மின்னூல் வெளியீடு : freetamilebooks.com

உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

மின்னூலாக்கம் & அட்டைபடம் – லெனின் குருசாமி – guruleninn@gmail.com

 

ஆசிரியர் : ஆர்.பட்டாபிராமன்

http://www.pattabiwrites.in/

pattabieight@gmail.com

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “போராளிகளின் சிந்தனைகள் epub” poraligalin_sindhanaigal.epub – Downloaded 132 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “போராளிகளின் சிந்தனைகள் mobi” poraligalin_sindhanaigal.mobi – Downloaded 33 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “போராளிகளின் சிந்தனைகள் A4 PDF” poraligalin_sindhanaigal_a4.pdf – Downloaded 288 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “போராளிகளின் சிந்தனைகள் 6 inch PDF” poraligalin_sindhanaigal_6in.pdf+66 – Downloaded 97 times –

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/poraligalin_sindhanaigal

புத்தக எண் – 314

செப்டம்பர்  6  2017

விதைப்போம் அறுப்போம் –திருத்துறைப்பூண்டி ச.கரிகாலன்

$
0
0

விதைப்போம் அறுப்போம் !

திருத்துறைப்பூண்டி ச.கரிகாலன்

மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com

உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

ஆசிரியர் தொடர்பு, மின்னூலாக்கம் – அன்வர் – gnuanwar@gmail.com

அட்டைப்படம் : மனோஜ்குமார், socrates1857@gmail.com

 

 

அகத்தி – நம்ம சந்தை/சிறார் களம் – 3ஆவது நிகழ்வில் இந்த மின்னூல் வெளியிடப்படுகிறது.

செப்டம்பர் 10 ஞாயிறு 2017

நேரம் : காலை 10 மணி முதல்
இடம் : MES ரோடு 1 வது குறுக்கு தெரு, கிழக்கு தாம்பரம், சென்னை ( கார்லி பள்ளி அருகில் )

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “விதைப்போம் அறுப்போம் ! epub” vithaipom-aruppom.epub – Downloaded 102 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “விதைப்போம் அறுப்போம் ! mobi” vithaipom-aruppom.mobi – Downloaded 32 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “விதைப்போம் அறுப்போம் ! A4 PDF” vithaipom-aruppom.pdf – Downloaded 203 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “விதைப்போம் அறுப்போம் ! 6 inch PDF” vithaipom-aruppom-6-inch.pdf – Downloaded 76 times –

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/vithaipom-aruppom

புத்தக எண் – 315

செப்டம்பர்  10  2017

வளரி ஆடி 2017 –மின்னிதழ் –அருணா சுந்தரராசன்

$
0
0

வளரி – ஆடி 2017 – மின்னிதழ்

ஆசிரியர்: அருணா சுந்தரராசன்
valari2009@gmail.com

 

மின்னூல் வெளியீடு : freetamilebooks.com

உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

மின்னூலாக்கம் & அட்டைபடம் – ப.மதியழகன்– mathi2134@gmail.com

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “வளரி ஆடி 2017 - epub” valari-magazine-aadi-2017.epub – Downloaded 0 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “வளரி ஆடி 2017 - mobi” valari-magazine-aadi-2017.mobi – Downloaded 0 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “வளரி ஆடி 2017 - A4 PDF” valari-magazine-aadi-2017.pdf – Downloaded 0 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “வளரி ஆடி 2017 - 6 inch PDF” valari-magazine-aadi-2017-6-inch.pdf – Downloaded 0 times –

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/valari-magazine-aadi-2017

புத்தக எண் – 316

செப்டம்பர்  16  2017


கோவை2தில்லி –அனுபவக் கட்டுரைகள் –ஆதி வெங்கட்

$
0
0

கோவை2தில்லி
[அனுபவக் கட்டுரைகள்]

 

 

ஆதி வெங்கட்
kovai2delhi@gmail.com

 

மின்னூல் வெளியீடு
www.freetamilebooks.com

 

மின்னூலாக்கம் மற்றும் அட்டைப்படம்:

வெங்கட் நாகராஜ்
venkatnagaraj@gmail.com

 

உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0
கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

 

கோவை2தில்லி!

ஒவ்வொரு பெண்ணிற்கும் திருமணம் என்பது அவளுடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி அமைக்கக்கூடியதாக அமைகிறது! மிதமான தட்பவெப்பத்தில், அழகான கோவையின் ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்த என்னை, அதிக வெயில், அதிக குளிர், பாஷை புரியாத, அழுக்கான தில்லிக்கு ஏற்றி அனுப்பியது திருமணம்! மனதிற்குள் ஒரு வித பயத்துடனும், எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற எண்ணத்துடனும் தான் தலைநகர் தில்லிக்கு முதல் முறையாக பயணம் செய்தேன்.

கோவையில் இருந்தவரை வீடு, அப்பா, அம்மா, தம்பி, நெருங்கிய உறவினர்கள், மிகக் குறைவான நட்பு வட்டம், தெரியாத வெளியுலகம் என இருந்த எனக்கு தலைநகரத்துக்குச் சென்ற பிறகு தான் தெரிந்தது என்னவரின் நட்பு வட்டம் எவ்வளவு பெரியது என! தங்கியிருந்த பகுதியில் இருந்த அனைத்து தென்னிந்த மனிதர்களுக்கும் [அது இருக்கும் நூற்றுக்கணக்கில்!] தெரிந்தவராக இருந்தார் என்னவர். வீட்டிற்கு வரும் நண்பர்கள், நேரே சமையலறைக்கு வந்து “என்ன சமையல் இன்னிக்கு?” என்று கேட்கும்போது வரும் உதறல் கொஞ்சம் நஞ்சமல்ல! சாப்பிட்ட பிறகு தான் செல்வார்கள்! சென்ற புதிதில் நிறையவே பயந்திருக்கிறேன்.

வெளியே போனால் எப்போது திரும்புவார் என்று சொல்ல முடியாத அளவுக்கு பொதுச் சேவை அவருக்கு! இரவு திடீரென தொலைபேசி/அலைபேசியில் அழைப்பு வந்தால், “இதோ வரேன்!” என்று புறப்பட்டு விடுவார் – தனியே இருந்தே பழக்கம் இல்லாத எனக்கு இரவு முழுவதும் உறக்கம் வராது – பயத்தில்! ஒரு முறை இரவு முழுவதும் வீட்டுக்கு வரவில்லை! நான் வீட்டில் தனியாக உறங்காமல் இருக்க, அவரும், அவருடைய ஒரு நண்பரும் இன்னுமொருவர் வீட்டில் இரவு முழுவதும் விழித்துக் கொண்டு – அவர்களுக்குத் துணையாக இறந்து போன அந்த வீட்டு மனிதரின் உடல்! அதிகாலை வீட்டுக்கு, சர்வ சாதாரணமாக இதைச் சொல்லி, ஒரு குளியல் போட்டு கிளம்பினவர், எல்லா வேலைகளும் முடிந்து வீட்டுக்கு வரும்போது மாலை ஐந்து மணி!

என்னதான் விஷாரத் வரை ஹிந்தி படித்திருந்தாலும், ஒரு மொழியைப் பேசுவதற்கும் படிப்பதற்கும் நிறையவே வித்தியாசம்! ஹிந்தி தெரிந்திருந்தாலும், தில்லி மக்கள் பேசும் ஹிந்தி புரியாமல் விழிபிதுங்கி வெளியே வரும் அளவுக்கு முழித்திருக்கிறேன். ஒரு முறை மார்க்கெட் சென்றபோது “நாஸ்பதி நாஸ்பதி” எனக் கூவிக் கூவி விற்க, என்னவரிடம் “என்னங்க ராஷ்ட்ரபதியை கூவிக் கூவி விற்கறானே” என்று கேட்டுவிட, அவர் இன்றளவும் என்னைக் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்! அவர் விற்றது பேரிக்காய் வகைகளில் ஒன்று – அதன் பெயர் ஹிந்தியில் நாஸ்பதி! இப்படி பல முறை பல்பு வாங்கி இருக்கிறேன். ஹிந்தியே தகராறு எனும்போது, ஹர்யான்வி, பஞ்சாபி என பல மொழி பேசும் தில்லி மக்களிடம், “என்னதான் சொல்ல வராங்க?” என்று தெரியாமல் மாட்டிக்கொண்டு முழித்திருக்கிறேன்!

மாற்றம் முதலில் பயமுறுத்தினாலும், நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன் – வட இந்திய சமையல் முதல் ஃபுல்கா எனப்படும் சப்பாத்தி செய்வது வரை, வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளை, சக மனிதர்களை, பாஷையை, என நிறையவே விஷயங்கள் தெரிந்து கொண்டது, புதிய நட்புகளைப் பெற்றது ஆகிய எல்லாமே இந்த மாற்றத்தினால் தான். கோவை2தில்லி தந்த மாற்றங்கள், சில சுவையான நிகழ்வுகள், நினைவுகள் ஆகியவற்றை இந்தக் கட்டுரைத் தொகுப்பில் பார்க்கலாம்! வலைப்பூவில் எழுதிய கட்டுரைகளை ஒரு தொகுப்பாக, சேமிப்பாக, மின்புத்தகமாக வெளிக் கொண்டு வருவதில் மகிழ்ச்சி.

கோவை, தில்லி என மாற்றி மாற்றி எனது அனுபவங்களைச் சொல்லி இருக்கிறேன். சொல்லி இருக்கும் நிகழ்வுகள், அவை மீட்டெடுத்த உங்கள் நினைவுகள், பற்றிய உங்கள் கருத்துகளைத் தெரியப் படுத்தலாமே!

நட்புடன்

ஆதி வெங்கட்
kovai2delhi@gmail.com
15-09-2017

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “கோவை2தில்லி - epub” Kovai2delhi%20-%20Adhi%20Venkat.epub – Downloaded 3 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “கோவை2தில்லி - mobi” Kovai2delhi%20-%20Adhi%20Venkat.mobi – Downloaded 1 time –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “கோவை2தில்லி -A4 PDF” Kovai2delhi%20-%20Adhi%20Venkat.pdf – Downloaded 2 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “கோவை2தில்லி - 6 inch PDF” Kovai2delhi%20-%20Adhi%20Venkat%20-%206inch.pdf – Downloaded 1 time –

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/Kovai2delhiAdhiVenkat

புத்தக எண் – 317

செப்டம்பர்  16  2017

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடுகள் – 50% தள்ளுபடியில் விற்பனை

$
0
0

தமிழ்ப்பல்கலைக்கழக 36ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு 12.10.2017 வரை தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் 50 விழுக்காடு தள்ளுபடியில் தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடுகள் விற்பனைக்குக்கிடைக்கும். வீட்டில் நூலகம் இல்லாதவர்கள் நூலகம் அமைக்கவும், நூலகம் வைத்துள்ளவர்கள் புதிய நூல்களை வாங்கவும் இவ்வாய்ப்பைப் பயன்படுத்துவோம்.

வாசிப்பை நேசிப்போம். வாருங்கள்.

(மேலும் விவரங்களுக்கு : பதிப்புத்துறை இயக்குநர், தமிழ்ப்பல்கலைக்கழகம், அரண்மனை வளாகம், கீழ இராஜ வீதி, தஞ்சாவூர் 613 001,தொலைபேசி: 04362-274581).

 

நன்றி – எழுத்தாளர் பா.ராகவன்

புத்தகங்கள் மொத்தமாய்…

$
0
0

புத்தகப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான பதிவுதான் இது….. இந்த விஞ்ஞான உலகில் புத்தகம் படிப்பவர்களின் எண்ணிக்கை  மிகவும் குறைவாக இருப்பது கண்டு வருத்தம் அளிக்கிறது…  எப்பொழுது டி.வி வந்ததோ அப்பொழுதிருந்து மக்களுக்கு புத்தகம் வாசிக்கும்பழக்கம் பாதியாக குறைந்திருந்ததுபிறகு செல்போன், இன்டெர்நெட், பேஸ்புக் வந்ததில் இருந்து மக்களின் புத்தகம்வாசிக்கும் சதவீதத்தின் மதிப்பு சரிந்து போய் இருப்பது இப்பொழுது தெரிகிறது….

புத்தகம் படிப்பதின் அவசியத்தை நான் நன்கு உணர்ந்து வைத்திருக்கின்றேன்….நம் மன உளைச்சலை போக்கும் சக்தி ஒரு புத்தகத்திற்கு உண்டு…. ஒரு புத்தகம்பத்து சைக்கியட்ரிஸ்ட்களுக்குச் சமமானது…..

நமது உள்ளத்தை செம்மை படுத்தக் கூடியது…. மனதை ஒருநிலைப் படுத்தஉதவுவது…. தன்னம்பிக்கையை விதப்பது…  எல்லாம் சரிதான் இப்ப நீ என்னதான் சொல்ல வர்றேன்னு நினைக்கிறது எனக்கு கேக்குது… அதாகப் பட்டது என்னவென்றால்….

இந்த காலத்தில் கைப்பேசி இல்லாதவர்கள் என்று சொல்பவர்களை விரல் விட்டு எண்ணிவிட இயலும்… அந்த அளவிற்கு ஸ்மார்ட் போனின் உபயோகம் அதிகரித்து விட்டது…. இத்தகைய காலத்தில் புத்தகம் படிப்பவர்களும் உள்ளனர் என்று சொன்னால் அது மிகையாகாது.. நான் உட்பட…. நம்மை போன்ற புத்தகப் பிரியர்களுக்காகவே நடத்தப்படும் இணையதளம் freetamilebooks.com இந்த தளத்தில் 300க்கும் மேற்பட்ட புத்தகங்களை உங்களது கைபேசியிலோ அல்லது கணினியிலோ பதிவிறக்கம் செய்து படித்துக் கொள்ள இயலும்… அனைத்துப் புத்தகங்களும் மிகவும் பயனுள்ள புத்தகங்கள்…. அத்துனை புத்தகங்களையும் ஒன்று ஒன்றாக தறவிறக்கம் செய்வது நமது நேரத்தை வீணடிக்கும்…. எனவே ஒரு  க்ளிக்கில் அனைத்து புத்தகங்களையும் தறவிறக்கும் வகையில் நான் ஒரு நிரலை பைத்தான் மொழியில் எழுதி உள்ளேன்….  தேவையானவர்கள் அதை பயன்படுத்தி அனைத்து புத்தகங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்…..  இதை அனைவராலும் பயன்படுத்த முடியாது சிறிதளவு கணினி அறிவு இருந்தால்தான் தரவிறக்கம் செய்ய இயலும்…. கூடிய விரைவில் அனைவராலும் பயன்படுத்தக் கூடிய வகையில…. பயனர் இடை முகப்பு கொண்ட மென்பொருளாக மெறுகேற்றப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்….

https://github.com/abuvanth/freetamilebook-downloader

-அபு.

developerabu@gmail.com

FreeTamilEbooks –முகநூல் குழுவில் இணைவீர்

$
0
0

நமது மின்னூல் திட்டத்தின் வாசகர்களும், எழுத்தாளர்களும், பங்களிப்பாளர்களும் உரையாடுவதற்கென ஒரு முகநூல் குழு உருவாக்கியுள்ளோம். இங்கு இணைய உங்களை அழைக்கிறோம்.

https://www.facebook.com/groups/501664956852522/

இங்கு புத்தக, மின்னூல் விமர்சனங்கள், மின்னூல் ஆக்க, அட்டைப்பட உருவாக்கக் கோரிக்கைகள் என பல்வேறு உரையாடல்களை நிகழ்த்தலாம். ஆக்கபூர்வமான உரையாடல்களை மட்டுமே எழுத வேண்டுகிறோம். காலை வணக்கம், இரவு வணக்கம், தீபாவளி, பொங்கல் போன்ற திருநாள் வாழ்த்துகளைத் தவிர்க்க வேண்டுகிறோம்.

முகநூலில் இல்லாத என் போன்ற மக்கள் நமது கூகூள் குழுமத்திலேயே உரையாடலாம்.

https://groups.google.com/forum/#!forum/freetamilebooksforum

புது மின்னூல் கோரிக்கைகளுக்கு கூகுள் குழுவையே பயன்படுத்தி வருவோம். இதற்கு முகநூல் குழுவின் பயன்பாட்டை சோதித்து, பிறகு அதையும் பயன்படுத்தலாம்.

உங்கள் கருத்துகளை தயங்காமல் எழுத வேண்டுகிறோம்.

 

நன்றி!

 

சில ரகசியக் குறிப்புகள் –ஜோதிஜி திருப்பூர்

$
0
0

சில ரகசியக் குறிப்புகள் – ஜோதிஜி திருப்பூர்

 

மின்னூல் வெளியீடு
www.freetamilebooks.com

 

மின் நூல் ஆசிரியர் ஜோதிஜி திருப்பூர்
அட்டைப்படம்
(Design Making) http://avargal-unmaigal.blogspot.com/
அட்டைப்படம் புகைப்படம் உரிமை
Henk Oochappan https://www.facebook.com/oochappan
(முறைப்படி அனுமதி பெற்றது)
உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0
கிரியேட்டிவ் காமன்ஸ்.
எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

 

ரகசியத்தை வெளியே பகிர்தல் ஆகாது. அந்தரங்கம் புனிதமானது என்கிறார்கள். ஆனால் எவையெல்லாம் அந்தரங்கம்? எது ரகசியம் என்பதற்கு அளவுகோல் உள்ளதா? எது வரைக்கும் அது அந்தரங்கம் என்ற எல்லைக்குள் வருகின்றது? குறித்து யாராவது நம்மிடம் சொல்லியிருக்கின்றார்களா?

நாம் எதையெல்லாம் மற்றவருக்குத் தெரியாமல் மறைக்க வேண்டும் என்று நினைக்கின்றோமா அவையனைத்துமே ரகசியமாகப் பார்க்கப்படுகின்றது. அதையே அந்தரங்கம் என்று சொல்லப்படுகின்றது.

குடும்பத்தலைவர், தலைவி, மகன், மகள் என்று ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அந்தரங்கம் உண்டு. இதன் தொடர்ச்சியாக நாட்டை ஆள்பவர்கள் வரைக்கும் அந்தரங்கம் விரிவடைந்து கொண்டே செல்கின்றது.

தற்போதைய நவீன தொழில் நுட்ப வசதிகளில் அந்தரங்க ரகசியங்கள் தான் அதி விரைவாக வெளியே வந்து விடுகின்றது. வீட்டுக்குள் தனியறையில் குளிக்கும் ஒரு இளம்பெண் ஏன் தன்னை அலைபேசியில் அவரின் நிர்வாண கோலத்தைப் படம் எடுத்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது? அலைபேசியில் அழித்தாலும் அது அழியாமல் எங்கங்கோ பரவும் வாய்ப்பு உள்ளது என்பதனை அறியாத அந்தப் பெண்ணுக்கு என்ன அறிவுரை சொல்ல முடியும்.? ஒரு அரசியல்வாதி பேசிய அலைபேசி உரையாடல் வெளியே வரும் போது அவரின் பதவியே பறிபோகின்றது.

ஆனால் நான் இந்த மின் நூலில் முகம் சுளிக்க வைக்க மற்றவர்களின் அந்தரங்கத்தைப் பற்றியோ, அதற்குப் பின்னால் உள்ள அசிங்கத்தைப் பற்றியோ பேசவில்லை. என் மனதோடு இருந்த பல விசயங்களைப் பற்றி பேசியுள்ளேன்.

இவ்வுலகில் ரகசியம் என்பதே இல்லை. நம் மனதை விட்டு மற்றவர்களுடன் உரையாடும் ஒவ்வொரு விசயமும் ரகசிய தன்மை இழந்துவிடுகின்றது. இதையே நான் பொதுவில் வைத்துள்ளேன்.

இந்த மின்னூல் வழியாகப் பல ரகசியங்களை உரையாடியுள்ளேன். நான் வாழும் சமூகம், சமூகத்தை ஒவ்வொரு நொடியும் பாதிக்கும் அரசியல், அதனை ஆட்டிப் படைக்கும் அரசியல்வாதிகள், அவர்களின் கொள்கை அதற்குப்பின்னால் உள்ள அவர்களின் கொள்ளை சார்ந்த சுயநலங்களைப் பற்றிப் பேசியுள்ளேன்.

நம் வாழ்வில் குழந்தைகள் அறிமுகமானதும் அவர்களுக்கும் நமக்கும் உண்டான அதிக முக்கியத்துவம் வாய்ந்த உரையாடல் மற்றும் பார்வை சார்ந்த ரகசியங்களைப் பகிர்ந்துள்ளேன்.

இந்த வருடம் நான் வாழும் சமூகம் என் பார்வையில் உள்ளது? என் குடும்ப உறவுகளில் உண்டான மாற்றங்கள் அதற்குக் காரணமாக இருந்த சமூகம் மற்றும் அரசியலைப் பற்றிப் பேசியுள்ளேன்.

இது வரையிலும் என்னுடைய மின் நூலில் நெடுங்கதை என்று எதையும் எழுதியதில்லை. இதில் ஒரு நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்து ஒரு நெடுந்தொடர் கொடுத்துள்ளேன். உறவுகளும், அதற்குப் பின்னால் வெளியே பகிர முடியாத சிக்கல் சார்ந்த ரகசியங்களைப் பேசியுள்ளேன்.

சில ஏற்புடையதாக இருக்கும். பல இதையெல்லாம் எழுதி என்ன ஆகப் போகின்றது? என்ற கேள்வியைக் கூட உங்களுக்குள் எழச் செய்யும்?

நாம் வாழும் போது நாம் வாழ்ந்த சமூகத்தை அவரவர் மொழியில் எழுதி வைப்பது அவசியம் என்று கருதியதால் வலைபதிவில் எழுதிய கட்டுரைகளைச் செப்பனிட்டு என் ஒன்பதாவது மின் நூலாக உங்கள் பார்வைக்குத் தந்துள்ளேன்

என் எட்டு மின் நூலுக்கு நம்ப முடியாத ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. 1,75,000 க்கும் அதிகமான நண்பர்களுக்கும் சென்று சேர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை என்பது நண்பர் சீனிவாசன் மேற்பார்வையில் நடக்கும் இந்தத் தளத்தில் உள்ள எண்ணிக்கை மட்டுமே. வெவ்வேறு தளங்களில் என் மின் நூல்கள் வெளியாகி உள்ளது. இது தவிர வாட்ஸ் அப் வாயிலாகக் கண்களுக்குத் தெரியாத நண்பர்கள் மூலம் பலருக்கும் சென்று கொண்டிருக்கும் தகவல்களை இணையத் தள நண்பர்கள் வாயிலாக அறிந்த போது ஆச்சரியமாக இருந்தது.

இதுவே தொழில் நகர வாழ்க்கையில் இடைவிடாத கடமைகளுடன் என் குடும்பத்தினருக்காக மட்டும் நான் வாழும் வாழ்க்கையோடு சேர்த்து எழுத்துலகத்திற்காகவும் உழைக்க வேண்டும் என்ற ஆர்வம் உருவாகின்றது. மாதம் தோறும் யாரோ சிலர் என் மின் நூலைப் படித்து விட்டு விமர்சனக் கடிதங்களை இன்று வரையிலும் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களின் ஆர்வத்திற்காகவும் தொடர்ந்து எழுத விரும்புகின்றேன். வாசிப்பனுபவம் கொண்ட ஒவ்வொரு நண்பர்களுக்கும் இந்த மின் நூலைக் காணிக்கையாக்குகின்றேன்.

நன்றி. வணக்கம்.

நட்புடன்

ஜோதிஜி. திருப்பூர்.

தேவியர் இல்லம்.
27.10.2017

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “சில ரகசிய குறிப்புகள் epub” sila-ragasiya-kurippugal.epub – Downloaded 146 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “சில ரகசிய குறிப்புகள் mobi” sila-ragasiya-kurippugal.mobi – Downloaded 45 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “சில ரகசிய குறிப்புகள் A4 PDF” sila-ragasiya-kurippugal-A4.pdf – Downloaded 330 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “சில ரகசிய குறிப்புகள் 6 inch PDF” sila-ragasiya-kurippugal-6-inch.pdf – Downloaded 68 times –

Send To Kindle Directly

 

 

 

 

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/sila-ragasiya-kurippugal

புத்தக எண் – 318

அக்டோபர்  27  2017

Viewing all 762 articles
Browse latest View live